பாங்கி புக்கிட் துங்கு தோட்டப் பாட்டாளிகளின் "சுகமான நினைவலைகள்"

பாங்கி புக்கிட் துங்கு தோட்டப் பாட்டாளிகளின் "சுகமான நினைவலைகள்"

கோலாலம்பூர், செப்.13
பாங்கி புக்கிட் துங்கு தோட்டப் பாட்டாளிகளின் "சுகமான நினைவலைகள்" எனும் ஒன்றுகூடும் நிகழ்வு
செப்டம்பர் 14 சனிக்கிழமை  நடைபெறவிருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தோட்டப் பட்டாளிகளின் நினைவலைகளை வெளியே கொண்டு வரும் நோக்கத்தில் 'சுகமான நினைவலைகள்' நிகழ்ச்சி காலை 11.00 மணி தொடங்கி மாலை 6.00 மணிவரையில் பாங்கி, புக்கிட் மக்கோத்தா கிளப் ஹவுசில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு
பாங்கி புக்கிட் துங்கு தோட்டத்தின் இளைஞர்கள் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.

பாங்கி சோமசுந்தரம் செல்லையா தலைமையில், 'பாங்கி மண்ணின் மைந்தன்' என்ற  குழு அமைக்கப்பட்டு , ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வில், இக்குழுவினர் சிறப்பு மலர் ஒன்றையும் வெளியீடு செய்யவுள்ளனர்.

பாங்கி துங்கு தோட்டத்தின் சிறப்பு அம்சங்களையும், வரலாற்றினையும் கூறும் விதமாக வெளியிடப்படும் இந்தச் சிறப்பு மலர், சுமார் 100 பக்கங்களில் வண்ணத்தில் வெளிவரவுள்ளது.

தோட்டம் சார்ந்த பல அரிய புகைப்படங்களையும் தொகுத்து இம்மலரில் இடம்பெறச் செய்துள்ளனர். தோட்டத்துத் தலைவர்களின் சிறப்பியல்புகள், தோட்டத் திருவிழா, தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள், இறந்தவர்களின் நினைவலைகள் என தோட்டம் சார்ந்த அனைத்தும் இம்மலரில் தொகுத்து வழங்கப்படுவதால், பொக்கிஷமாக இம்மலர் அமையும் என்பதோடு, நிகழ்வின் முத்தாய்ப்பாகவும்இருக்கும் என்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

இந்த நிகழ்வில் தோட்டத்தில் இருந்த மூத்தோர்களுக்குச் சிறப்பு செய்யப்படவுள்ளது. பாங்கி புக்கிட் துங்கு தோட்டத்தின் சுகமான நினைவுகளைப் பெருமையோடு சுமந்து செல்ல, பாங்கி புக்கிட் துங்கு தோட்டப் பெருமக்கள் திரளாகக் கலந்துகொள்ளும்படி பாங்கி மண்ணின் மைந்தன் இயக்கத் தலைவர் சோமசுந்தரம் கேட்டுக்கொள்கிறார்.
தொடர்புக்கு:014-6344062

Comments