சுபாங் ஜெயா வவாசான் பள்ளி ஒருமைப்பாட்டு பள்ளியாக உருமாற்றம் -பொன். வேதமூர்த்தி

சுபாங் ஜெயா வவாசான் பள்ளி ஒருமைப்பாட்டு பள்ளியாக  உருமாற்றம்
-பொன். வேதமூர்த்தி

சுபாங் ஜெயா, செப்.13-
சுபாங் ஜெயா யு.எஸ்.ஜே.15 டத்தோ ஓன் ஜாபார் வவாசான் தேசியப் பள்ளியை ஒருமைப்பாட்டு பள்ளியாக தத்தெடுக்க பரிந்துரை செய்யப் போவதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்தப் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட  விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர், "ஒருமைப்பாட்டு பள்ளியாக உருமாற்றம் அடைந்தால், இந்தப் பள்ளியில் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தலாம். அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும் இதை விரிவுபடுத்தலாம் என்று வேதமூர்த்தி சொன்னார்.

மூவின மாணவர்களையும் ஒரே வளாகத்தில் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமர் துன் மகாதீர், நான்காவது பிரதமராக பொறுப்பு வகித்த காலத்தில் கடந்த 2002-இல் உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளி, கடந்த 18 ஆண்டுகளாக இளம் மாணவர்களிடையே ஒருமைப்பாட்டு உணர்வை வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது  என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி சொன்னார்.

பள்ளியின் துன் பேராக் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், நிறைவாக பல்லின மாணவர்களிடயே அமைச்சர் அளவளாவினார்.

Comments